Friday, October 1, 2010

எந்திரன் {copy,edit,paste}


உலக சினிமா ரசிகர்களையே ஏக்கத்தில் தூக்கிப்போட்ட எந்திரன் திரைப்படம் உலகளாவிய ரீதியில் அக்டோபர் ஒன்று முதல் வெளிவந்து பட்டையை கிளப்ப தொடங்கியுள்ளது... என்றுமே இல்லாத வகையில் அதீத எதிர்பார்ப்பு.. காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐஸ்வர்யாராஜய் பச்சன்,இயக்குனர் சங்கர் ,ஆஸ்கார் ரஹ்மான் பிளஸ் சன் பிக்சர்ஸ் என்ற பிரம்மாண்ட கூட்டணி... அதை விட ஆசியாவிலிருந்து வெளியாகும் முதல் பிரம்மாண்ட திரைப்படம்.. வெளியாக முதலே கலேச்சங்கள் குவிந்துவிட்ட திரைப்படம் என ஆவலைதூண்டி விட வழமையை விட நம் நாட்டிலும் பெரிய பெரிய கட்டவுட்டுகள் பானர்கள் என களைகட்டியுள்ளது... அத்தனை எதிர்பார்ப்புகளோடும் இருக்கையில் அமர்ந்து கொண்டேன் இரண்டாம் நாள் இரண்டாம் ஷோவில்.


பலத்த விசிலுகளோடு சன் பிச்சர்ஸ் விளம்பரதுடன் தொடங்க புதிய மனிதா பாடல் எழுத்து வரிசையை தாங்கி வருகிறது...


தொடக்க காட்சி ரோபோக்களின் ஆராச்சி நடத்தும் ஆய்வுகூடம் அமைதியான அறிமுகத்தோடு நம்ம சூப்பர் ஸ்டார் (ஆர்ப்பாட்டம் பில்டப் இன்றிய அறிமுகம்... அதுவே சொல்லுது இது ரஜினி படமோ ஷங்கர் படமோ இல்ல திரைப்படம்) அடுத்த வினாடிகளில் ஐஸ்வர்யா ராய் அறிமுகம்... வெரி சிம்பிளிசிட்டி.. (ஆனா அக்காக்கு வயசானது மாதிரி இருந்துச்சு தொடக்கத்தில.)

தொடர்ந்து வளரும் ரஜினியின் தாடி பிளஸ் உழைப்போடு வளர்கிறான் புதிய மனிதன் எந்திரன்..


வசீகரனின் உழைப்பில் சந்தானம் கருணாசின் நக்கல்ஸ் சிரிப்போடு வளர்ந்து நிக்கும் ரோபோ தன் சேட்டைகள் , தனக்குள் படைக்கப்பட்ட தொழில் நுட்பங்களோடு ரசிகர்களை மட்டுமல்ல இடைவேளைவரை மற்ற பாத்திரங்களையும் அசர வைக்குறான்.


திரைக்கதையை சொல்லப்போனால் தனக்கு சொல்லப்படும், ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ள வேலைகளை பிரமாதமாக செய்து முடிக்கும் ரோபோ.. இதற்கு உணர்வுகள் ப்ரோக்ராம் செய்யப்படவில்லை.. சுயமாக சிந்திக்காது.. இந்த ரோபோவை அங்கீகாரப்படுத்துவதற்காக ரோபோ அங்கீகாரம் வழங்கும் அமைப்பிடம் தன் ரோபோவை அறிமுகப்படுத்துகிறார் வசீகரன் என்கிற ரஜினி. அங்கீகாரம் வழங்கும் சபையில் முக்கிய உறுப்பினராகவும் நாச வேலைகளுக்காக ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானியாகவும் வில்லன் பாத்திரமாக டானி தேங்க்சாங்ப. இவர் ரோபோ சிட்டிக்கு உணர்ச்சிகள் இல்லை ஆகவே தவறாக பயன்படுத்திவிடலாம் எனவே அங்கீகாரம் வழங்க முடியாது... என தட்டிக்கழிக்கிறார். இதனால் வசீகரன் தனது படைப்புக்கு உணர்வுகளை ப்ரோக்ராம் செய்கிறார்.. முழுமையாக மனிதனாக அவதாரம் எடுக்கும் ரோபோ சிட்டி மனித உணர்வுகள், காதல் என ஆசைகளுக்குள் அகப்பட்டு எப்படி வில்லன் வேடமேடுக்கிரான் என்ன என்ன வித்தைகள் காட்டுகிறான்.. அவன் பிடியில் இருந்து நாட்டை எப்படி வசீ என்கிற ரஜினி காப்பாதுறார் என்பதை ஹாலிவூட் ஸ்டைலில் கிராபிக்ஸ்கள் தொழில் நுட்பங்கள் பறக்க சொல்லியிருக்கிறது திரைக்கதை...




படம் போகப்போக முதல் காட்சியில் அக்காவா தெரிஞ்ச ஐஸ் உருகும் ஐஸ்ஸா ஜொலிக்குது பிறகு. சூப்பர்ஸ்டார் அவர் அபிசேக்க விட ஜங் எண்டா பாத்துக்கங்களேன். நடிப்பாருயா இவரு இன்னும் இருபத்தைந்து வருசத்துக்கு.. ரசிக்கலாம். அதுவும் அந்த வில்லன் சிரிப்பு ,அந்த நடை அப்பப்பா. சொல்லி வேலை இல்ல.


படத்தில் பாராட்டப்படவேண்டிய ரசிக்கப்படவேண்டிய ஆச்சரியப்பட வேண்டிய விடயங்கள் ஏராளம்..

*** திரைப்பட கரு சிறிதாக இருந்தாலும்.. திரைக்கதையில் வர்ணமேற்றி தொழில் நுட்பங்களை கையாண்டு விஞ்ஞானம் பிழையாது காரணங்களோடு சொல்லியிருக்கும் அற்புதமான கற்பனை.. அதற்கு முதல் சலுயூட் சங்கர் மற்றும் சுஜாதாக்கு..


***ரோபோவாக வாழ்ந்து விஞ்ஞானியாக உழைத்திருக்கும் சூப்பர்ஸ்டாருக்கு பெரிய சலுயூட். நகைச்சுவையில் கலக்கியிருக்கும் சிட்டி ரோபோக்கு இன்னொரு பெரிய சல்யூட். அதுவும் அப்பாவியா விஞ்ஞானி ரஜினிய சிட்டி போய் கேக்கும் "மனுஷங்களுக்கு இருக்குற ஒண்டு எனக்கு இல்லையாமே? அது என்ன?" முடியல அந்த இடத்துல.




***பாடல்களை அற்புதமாக படமாக்கி, திரைக்கதையின் ஓட்டத்துக்கேற்ப வெவ்வேறு லைற்றிங், கோணங்களில் நம்ம ஊரு திரைப்படம் பிளஸ் ஹாலிவூட் பாணியில் காட்சிகளை பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலுக்கு அடுத்த சலுயூட். கிளிமஞ்சாரோ பாடல் காட்சி மற்றும் நடனம் எத்தன தடவ வேணும்னாலும் பார்க்கலாம்.


***கிராபிக்ஸில் பின்னி பிசிரெடுத்திருக்கும் கிராபிக்ஸ் கலைஞர்கள் மற்றும் கிராபிக்ஸில் சண்டைக்காட்சிகளை டைரக்ட் செய்த ஷங்கர். இவர்களுக்கு அடுத்த சலுயூட்..


***அடுத்து இப்படியான திரைப்படங்களில் முக்கிய பங்கு வகிப்பது இரண்டு விடயம். அரங்க அமைப்பு மற்றும் எடிட்டிங் . அதை வழமை போலவே பக்காவா நடத்தி ஆய்வுக்கூடங்கள் ரோபோக்கள், அப்படியே மனதில் பதிய செய்திருப்பார்கள் கலை இயக்குனர் சாபு சிரில் மற்றும் எடிட்டர் அன்டணி. இவர்களுக்கு அடுத்த சல்யூட்.


***அடுத்து படத்தில் நன்றாக அமையப்பெர்ரிருப்பது பின்னணி இசை அதில் ஆஸ்கார் நாயகன் கலக்கி இருப்பார். அத்தோடு பாடல்களுக்காக ரஹ்மான் மற்றும் வைரமுத்துக்கு பலமுறை சல்யூட் அடிச்சாச்சு..


***எல்லாத்தையும் விட பெரிய பெரிய சல்யூட் ஸ்டன்ட் கலைஞர்கள், நடன இயக்குனர்கள் மற்றும் முக்கியமாக மேக்கப் கலைஞர்கள்.


படத்துல நல்லவிசயங்களா சொன்னா ஏமாந்ததுகளையும் சொல்லத்தானே வேணும்..

***வழமையான ரஜினியின் ஸ்டைல் எண்டது மிஸ் ஆச்சு.. ரஜினி ரசிகர்களுக்கு இது ஏமாற்றம்.


*** சந்தானம் மற்றும் கருணாஸ் வீணாக்கப்பட்டிருக்கிரார்கள்.


***லாஜிக்க்கலா அங்க அங்க சின்ன பிசிரல்கள் . இருந்தாலும் கற்பனைக்கதை எண்டதால ரசிக்கலாம்.




***பிற்பாதியில் வரும் சிட்டி ரோபோக்கு கொடுக்கப்பட்ட தோற்றம் , மேக்கப் ஒவ்வாமையா இருந்துச்சு.. அதே போல் அரிமா அரிமா பாடல் கிராபிக்ஸ்ல நூற்றுக்கும் மேற்பட்ட ரஜனி நடனமாடுவதா இருந்துச்சு. அதில் ஆடைவடிவமைப்பு , நடனம் பாடலின் மெருகை கொஞ்சம் குறைத்தேவிட்டது..


***எல்லாத்தையும் விட பெரிய ஏமாற்றம் எகிறிப்போன டிக்கெட் விலைகள்.


<மெசேஜ்:> மனிதனைப்போல் சிந்திக்ககூடிய உணர்வுகள் கொண்ட ரோபோ எதிர்காலத்தில் உருவாக்கப்பட்டால்.. அவற்றுள் தீவிரவாதி ரோபோகளும் இருக்கும் .. நல்ல ரோபோகூட தீவிரவாதியா மாறலாம். (அதுக்கும் காதல் வந்தா :P )


மொத்தத்தில் இந்த எந்திரன் மனிதனாக வாழ்ந்து தான் அழாமல் எம்மை அழவும் சிரிக்காமல் எம்மை சிரிக்கவும் வைத்துள்ளான். பொக்கிசங்களில் சேர்க்கலாம்.

இயந்திரன் பாத்தாச்சு

http://ashwin-win.blogspot.com/2010/10/blog-post.html

Thursday, September 30, 2010

இரசனைகள் உண்டு


காதலிக்கத்தெரியாத காதலனுடன்
காதல் மொ‌ழி பேசச்சொல்லி
தர்க்கம்
செய்யும் தா‌ரகையே கேள்
உனதுயிர்க் காதலனுக்கு பலவித
இரசனைகள் உண்டு
ஆனால்
அந்தப்பாவிக்கு தெ‌ரியாது அதைவெளிப்படுத்த
உனதருமை
நண்பனாய் நான் ஒன்று

சொல்லுகிறேன் கேள் பேதையே
பிறப்பினால் ஊமையானால்
இவ்வலி
புதிதல்ல - ஆனால்
வாயிருந்தும் பேச முடியாது தவிக்கும்
அந்த பாவியை
அரவணைத்து
அதன் உணர்வு‌களை எங்கனம்
அறிவாயோ அன்று நீபெறும்
இன்பம்
இவ்வுலகில் எவரும் பெற்றிரார்

Wednesday, September 16, 2009

இனிய கனவு

அது ஓர் அழகிய நிலாக்காலம்.
கவலை வெயில் சுடாத இனிய இரவைப்போன்றது.
இரவின் மடியில் இனிய உறக்கத்தில் நான்.

என்னைத் தேடி மெல்ல வருகிறது ஒரு கனவு.
ஆனால், கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
கனவைத் துரத்தி விடுகிறேன் நான்.

அதன் வருகையும் என் துரத்தலும் தொடர்கதை.
கனவைத் துரத்தி துரத்தி கடைசியில் கனவின் பின்னே நான்.
அதனை விரட்டும் முயற்சியில் தொடங்கிய என் துரத்தல்
எப்படியாகினும் அதனை பிடித்து விடுகிற முயற்சியில் முடிகிறது.

ஓர் பௌர்ணமி இரவில் அந்தக் கனவும் கை (கண்?) கூடுகிற‌து.
கனவுக்கே உண்டான இயல்போடு
அது கலைந்து விட முயலும்போதெல்லாம்
நனவாகும் ஆசைகாட்டி அதனை என்னோடு இருத்திக் கொள்கிறேன்.

இறுதியில், தான் நனவாகப் பிறக்கவில்லை
தான் கலைவதற்காக தான் பிறந்ததாக
எனக்கந்த கனவு சொல்கிற‌போது
நான் மரணிக்கிறேன்.

கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
இப்போதும் என் கனவு கலையவில்லை.
கனவு காண்கையிலேயே,
எனக்கு தான் நிகழ்ந்துவிட்டது…
மரணம்!


நன்றி arutperungo.com

Sunday, August 16, 2009

காதல்கணங்கள்................

தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன…
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!



நன்றி :-arutperungo.com

Friday, August 14, 2009

தமிழின் சிறப்பு

தமிழ் சங்க காலத்திற்கு முன்பும் பின்பும் சுவடிகளில் படைப்புகள் பலவற்றுக்கு உரையாசிரியர்கள் உரைகண்டனர். அப்போதும் அதற்குப் பின்னர் காகித அச்சு தொழில் நுட்பத்திற்கு மாறிடும் போதும் அதன் வரி வடிவங்கள் சிற்சில மாற்றம் கண்டன. இவ்வாறு மாற்றம் கண்டிடினும், அதன் வளமை மாறவில்லை. இது தமிழின் சிறப்பாகும். அதே போல் அச்சுருக்களிலும் காலத்துக்கேற்ப மாறுதல்கள் வந்த போதும் அந்த மாற்றங்களுக்கும் தமிழ் உட்பட்டது. அச்சுக்கலையின் வேகமான பல்வேறு மாற்றங்களுக்கும் தமிழ் உட்பட்டது. இதேபோல் கணித்தொழில் நுட்பம் தொடங்கிய போதும் அதில் ஏற்பட்டு வரும் பல மாற்றங்களிலும் தமிழ் தன் தனித்தன்மையை இழக்காமல் அத்துணை மாற்றங்களையும் எதிர்கொண்டு காலங்கள் தோறும் நிகழ்ந்த மாற்றங்களை உள்வாங்கி தனித்தன்மையுடன் மிளிர்கிறது.
ஆங்கிலம் மற்றும் பிரென்ச் மொழிகளில் புதிய தொழில் நுட்ப அறிவியல் துறைகள் உருவான போது புதிய புதிய சொற்கள் உருவாயின. உலக மொழிகள் பலவும் ஆங்கிலம் பிரென்ச் சொல் வடிவங்களை அப்படியே ஏற்றது. ஏனெனில் அவைகளுக்கு புதிய சொல்லாக்கம் செய்திடும் வண்ணம் மொழி வளம் குறைவு. ஆனால் தமிழ் வேர்ச்சொல் அடிப்படையிலும் வினைகளின் அடிப்படையிலும் புதிதாக உருவான சொல்லுக்கு நிகரான சொற்களை உருவாக்கும் திண்மை பெற்றதால் தன் தனித்தன்மையை நிலை பெற வைத்துள்ளது. காட்டாக ஜப்பானியர்கள் தொலைக்காட்சி தொழில் நுட்பத்தில் மேற்குலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகின்றனர். எனினும் ஆங்கில சொல்லான டெலிவிஷன் என்ற சொல்லுக்கு மாற்றாக அக்கருவியை ஜப்பான் மொழியில் வழங்க இயல்வில்லை. எனவே அவர்களும் டெலிவிஷன் என்றே வழங்குகின்றனர். ஆனால் டெலிவிஷன் எனும் கருவி புரியும் வினையை தமிழில் உட்கிடத்தி அதனை தொலைக்காட்சி என வழங்குகிறோம். இதுவே மொழிச் சிறப்பு. தமிழில் வழங்கப்பட்டு வரும் சொற்களாயினும் புதிய சொல் ஆக்கம் எதுவாயினும் இயற்கை - ஆக்கம் - செயற்கை என உருவாக்கிட தொல்காப்பியத்தின் சொல் அதிகாரம் தெளிவைத் தருகிறது. இது தமிழுக்கே உரித்தானதாகும். எனவே தான் இன்று வளர்ந்து வரும் எத்தகைய புதிய துறையாக இருப்பினும் அதற்கான சொல்லாக்கம் தமிழால் செய்ய இயலும். மனித அறிவின் எல்லையற்ற வளர்ச்சிக்கு ஈடாக தமிழும் இணையற்றதாக உள்ளது.